தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
ஆரஞ்சு தோல்
புளி
வெல்லம்
வரமிளகாய்
செய்முறை: முதலில் ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதி அளவு வற்றி வந்த பிறகு தோலை தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து கடாயில் எண்ணெய், உளுத்தம்பருப்பு, கிராம்பு, புளி, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். அவ்வளவுதான், சுவையான ஆரஞ்சு தோல் துவையல் தயார்.