தேவையானவை:
பனங்கிழங்கு – 4,
தேங்காய்ப்பால் – ஒரு கப்,
பனை வெல்லக் கரைசல் – அரை கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரி,
திராட்சை – தலா 2 டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி – திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.