தேவை:
புளி பூ – 1 கப்,
உளுத்தம் பருப்பு – 50 கிராம்,
கொண்டைக்கடலை – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 10,
புளி – சிறிது அளவு,
கடுகு – 1 ஸ்பூன்,
உப்பு – சுவைக்க.
துருவிய தேங்காய் – ½ கப்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, மிளகாயை வதக்கவும். பிறகு கொண்டைக்கடலை மற்றும் உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அத்துடன் உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு புளி சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைத்தால் சுவையான புளியம் பூ துவையல் ரெடி. சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும் .