தேவையான பொருட்கள்
1/2 கப் சம்பா கோதுமை ரவை
1 கப் தண்ணீர்
4 தேக்கரண்டி நெய்
1/2 கப் வெல்லம்
1/4 கப் துருவிய தேங்காய்
1 தேக்கரண்டி முந்திரி, திராட்சை
ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை
ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதனுடன் சாம்பா கோதுமை ரவையை சேர்த்து கலந்து, கெட்டியானதும் இறக்கி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரை கப் வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்த வெல்லத்தில் தேங்காய் துருவல், ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், உப்பு, முந்திரி சேர்த்து கலந்து, முன்பு சமைத்து தயாரித்து வைத்துள்ள ரவை கலவையை சேர்த்து, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு கலந்து கெட்டியானதும் தனியே வைத்து, ஆறியவுடன் தேவையான அளவு உருட்டி, வேகவைக்கும் தட்டில் வைக்கவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும், தயாரித்த உருண்டைகளை ட்ரேயில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். இப்போது நீங்கள் சத்தான, சுவையான, கோதுமை ரவை இனிப்பு கொழுக்கட்டை சுவைக்க தயார்.