தேவையான பொருட்கள்:
நாட்டு சர்க்கரை – 1 கப்
ஏலக்காய்-4
வாழைப்பழம்-2
தோசை மாவு – 1 கப்
நெய்-தேவையான அளவு
மிளகு தூள் – 1 சிட்டிகை
செய்முறை: முதலில், ஒரு பாத்திரத்தில் 1 கப் தோசை மாவு எடுத்துக் கொள்ளவும். இப்போது இரண்டு வாழைப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது பாலுடன் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதை தோசை மாவுடன் சேர்த்து 1 கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், 1 சிட்டிகை மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நெய் சேர்த்து தோசை ஊற்றுவது போல் மாவை ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேகவிடவும். அவ்வளவுதான், சுவையான வாழைப்பழ தோசை ரெடி.