சென்னை: சளி, இருமல் உள்ளவர்களுக்கு சிறந்தது கோழி சூப். இதை சுவையோடு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கோழி – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி- 1 அங்குலம்
மஞ்சள்தூள்- சிறிதளவு
மிளகு தூள்-2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு.
செய்முறை: 1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து , துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி , பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் கோழி துண்டுகளை சேர்த்து நறுக்கிய இஞ்சி , வெங்காயம், 2 தேக்கரண்டி மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு , மஞ்சள் தூள் போடவும்.
லேசான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும். சுவையான கோழி சூப் தயார் .