எக் பிரெட் உப்புமா வித்தியாசமான சுவையில் அசத்தலாக செய்ய தெரியுங்களா? இதோ உங்களுக்காக செய்முறை.
தேவையான பொருட்கள்
பிரெட் – 6
முட்டை – 2
வெங்காயம் – 1
கடுகு – 1ஸ்பூன்
உளுந்து – 1ஸ்பூன்
மல்லி இலை – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
உப்பு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு தாளித்து வதக்கவும்.
உதிர்த்த பிரெட்டை போட்டு நன்கு கிளரவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிளறவும். முட்டை பிரெட்டுடன் நன்கு கலந்த பின் இறக்கி சூடாக பரிமாறவும்.
இந்த எக் பிரெட் உப்புமா வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.