தேவையான பொருட்கள்:
அத்திப்பழம் – 10
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை அல்லது தேன் – தேவையான அளவு
வென்னிலா ஐஸ் – 1 க்யூப்
செய்முறை :
முதலில் அத்திப் பழத்தை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு இறுதியில் அதில் வென்னிலா ஐஸ் சேர்த்து ஒரு முறை அடித்து இறக்கி பரிமாறினால், அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி!!!