தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 1
ஒரு சிட்டிகை சோம்பு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
ஒரு சிட்டிகை கொத்தமல்லி இலை.
உப்பு – தேவைக்கேற்ப
ஃப்ரெஷ் கிரீம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அது உருகியதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு பொரிந்ததும் துருவிய பீட்ரூட் விழுது, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லி தழை சேர்த்துப் பரிமாறவும்.