தேவையானவை
பச்சை பயறு – 100 கிராம்
அரிசி – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 கொத்துகள்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
எலுமிச்சை – கால் பழம்
பூண்டு – 10 பல்
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
பச்சைப் பயிரை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு குக்கரை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, பச்சைப் பயறு சேர்த்து வதக்கவும். அதில் ஒரு பகுதி தண்ணீரில் 3 பாகங்கள் சேர்க்கவும். அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.