சென்னை: ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள டிப்ஸ்.
பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் பச்சை மிளகாயுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.
முள்ளங்கி, காலிப்ளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம். பிஸ்கட்டுகள் நமர்த்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரைப் போட்டு மூட்டை போல் கட்டி, பிஸ்கட் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும். பால் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கி, இத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்தால் சுவையான மில்க் ப்ரூட் சாலட் தயார்.
ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.