சமையலறை டிப்ஸ்களை தெரிந்து கொண்டால்….! எப்பொழுதும் ருசிக்கும் சமையல்..!. இந்த டிப்ஸ்களை பாலோ பண்ணுங்க! சமையலறை என்பது ஒவ்வொரு வீட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. சமையல் செய்யும்போது சில நேரங்களில் பலருக்கு ஒரு மனநிலை இருக்காது. எதையாவது யோசித்துக் கொண்டு பரபரப்பாகவும் அவசர அவசரமாகவும் சமையல் செய்வது வழக்கம். சமையல் செய்யும் போதோ அல்லது சமையலறையிலோ சிலருக்கு சில குழப்பங்கள் ஏற்படும் பலர் அதனை ஸ்மார்டாக கையாளுவார். அப்படி அன்றாடம் நாம் சமைக்கும்போது வேலையை எளிதாக்கும் சில சமையலறை குறிப்புகள் பற்றி பின் வருமாறு காணலாம்.
தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசையோ,இட்லியோ ஊற்றினால் புளிப்பும் தன்மை நீங்கி டேஸ்டாக இருக்கும். சாம்பாருக்கு பொடி அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. காலி பிளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சிறிது சர்க்கரை கலந்து வேக வைத்தால் காலிபிளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்துவிடும்.
தோசைக்கு, இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு வெண்டைக்காயை சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூ போல மிருதுவாக இருக்கும். சாதம் மிஞ்சிவிட்டால். ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம் சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வைக்கலாம். காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போல் ஆகிவிடும். கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
வெங்காயம்.பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் கண்ணிலும் நீர் வராது. நீங்கள் வீட்டில் கோதுமை மாவு அரைக்க விரும்பினால் 2 கிலோ சாதாரண கோதுமை மற்றும் ஒரு கிலோ சம்பா கோதுமை அதனுடன் 30 கிராம் அளவிற்கு சோயா சேர்த்து காய வைத்து அரைத்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும். மேலும் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தரும்.