குழந்தைகளுக்கான கோடைக்கால சிறந்த விருப்பமான உணவாக, சுடச்சுட கோதுமை அல்வாவை வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம். இந்த அல்வாவை செய்ய மொத்தம் நான்கு பொருட்கள் போதும். ஒருமுறை செய்தால் ஒரு வாரம் வரை சாப்பிட வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு தேவையானவை: கோதுமை மாவு, நெய், முந்திரி, சர்க்கரை. ஒரு பவுலில் அரை கப் கோதுமை மாவு எடுத்து தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் கடாயில் அரை கப் நெய் ஊற்றி, முந்திரியை வதக்கி எடுத்து வைக்கவும். அதே கடாயில் கோதுமை மாவு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும். ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
பின், சிறிதளவு சர்க்கரையை தனியாக ஒரு பாத்திரத்தில் சூடாக்கி, அது ஆரஞ்சு கலந்த அரக்கு நிறமாக மாறும்போது அந்த கலவையை அல்வாவில் சேர்த்தால் சிறந்த நிறத்தையும், சுவையையும் பெறலாம்.
முடிவில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் தேவையான அளவு முந்திரியை சேர்த்து, சில நிமிடங்கள் கிளறி எடுக்கவும். இவ்வாறு செய்த கோதுமை அல்வா ஒரு வாரம் வரை சுவையுடன் கெடாமல் இருக்கும்.
வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய, சுவையுடன் ஆரோக்கியமான இந்த அல்வாவை இன்று நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!