சென்னை: வெயில் காலத்தில் சேப்பகிழங்கு உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது . சேப்பகிழங்கில் சுவையான மோர் குழம்பு செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையானவை:
மோர் – 1/2 லிட்டர்
சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ
கடலை பருப்பு – 1 tbsp
பச்சரிசி – 1 tbsp
உப்பு – தே.அ
அரைக்க :
தேங்காய் துருவல் – 3 tbsp
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 4
மிளகு – 1 tsp
சீரகம் – 1 tsp
மஞ்சள் – 1/2 tsp
தாளிக்க :
எண்ணெய் – 1 tsp
கடுகு – 1 tsp
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – 1/4 tsp
பெருங்காயத்தூள் – 1/4 tsp
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைத்து வேகவைத்து கொள்ளவும். சேப்பகிழங்கை வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்து கொள்ளவும். தயிரை கரைத்து கொள்ளவும். அதனுடன் அரைத்த கடலை பருப்பு மற்றும் தேங்காய் துருவல் விழுது ஆகியவற்றை சேர்க்கவும். சேப்பகிழங்கையும் சேர்த்து கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கவும் அதில் மோர்கலவையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார்.