தேவையான பொருட்கள்:
கோழி – 1/2 கிலோ
வெங்காயம் – 15
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லிகைப் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தயிர் – 1 டீஸ்பூன்
பால் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – பாதி
கொத்தமல்லி கொத்து – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க…
முந்திரி – 8
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பாப்பி விதைகள் – 1/4 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
புதினா – சிறிது
செய்முறை:
முதலில் கோழியை நன்றாக கழுவவும். பிறகு மிக்ஸியில் முந்திரி, மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, புதினா சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், பால் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, தீயை குறைத்து நன்றாக வதக்கவும். பின்னர் கடாயை மூடி, கோழியை மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும் அதில் ஒரு கொத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி!