
மீன் சாதாரணமாக பொரித்து சாப்பிடப்படுவதோடு, குழம்பாகவும் சமைக்கப்படுகிறது. ஆனால் முட்டை பொடி மாஸ் போல மீனில் பொடிமாஸ் செய்து சாப்பிட்டால் அது ஒரு தனித்துவமான சுவையை தரும். இதை செய்ய முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து செதில்களை நீக்க வேண்டும். பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து துண்டு துண்டாக வெட்டிய மீனை போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனுடன் முன்பு வேகவைத்த மீனை சேர்த்து 5 நிமிடம் வரை வதக்க வேண்டும்.
இறுதியில் மிளகு தூள், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து மேலும் 3 நிமிடம் வேகவைத்தால் சூப்பரான சுவையுடன் மீன் பொடிமாஸ் தயாராகிவிடும். இந்த ரெசிபி சாப்பிடவே மாட்டேன் என்று சொல்வோரையும் கவரும் சுவையைக் கொடுக்கும். இதை சாதம், சப்பாத்தி, தோசை போன்ற எந்த உணவுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.