தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 டீஸ்பூன்
வரமிளகாய் – 15
முழு பூண்டு – 2
தக்காளி – 3
கல்உப்பு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் கல் உப்பையும் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, வதக்கிய பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அரைத்த சட்னியை அதில் சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி தயார்.