தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1/2 கப்.
மாங்காய் – 1.
பச்சை மிளகாய் – 3.
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.
உப்பு – 1 ஸ்பூன்.
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.
நெய் – 2 ஸ்பூன்.
கடலை பருப்பு – 1 ஸ்பூன்.
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.
கடுகு – 1/2 ஸ்பூன்.
சீரகம் – 1/2 ஸ்பூன்.
சிவப்பு மிளகாய் – 4.
பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்.
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை :
முதலில், மாங்காய் பருப்பு செய்வதற்கு எடுத்து வைத்துள்ள மாங்காயை சுத்தம் செய்து, தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
இப்போது ஊறவைத்த பருப்பு மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் குக்கரில் போட்டு, நறுக்கிய மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
பருப்பு நன்றாக வெந்ததும் அதில், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். மசாலா வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில், நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர், அதில், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து, அந்த தாளிப்பை பேருக்கு கலவையில் சேர்த்தல் சுவையான மாங்காய் பருப்பு தயார். இந்த புளிப்பு மற்றும் காரமான மாங்காய் பருப்பை, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.