தேவையான பொருட்கள் :
இஞ்சி
பூண்டு
மல்லி இலை
புதினா இல்லை
தேங்காய்
வெங்காயம்
தக்காளி
முந்திரி பருப்பு
சோம்பு
செய்முறை:
கடாயில் சிறிது கிராம்பு, ஏலக்காய், பட்டை ஆகிவற்றை சேர்த்து வதக்கி, ஒரு வெங்காயத்தை நீள வாட்டில் வெட்டி நன்றாக வதக்கவும். பிறகு தக்காளியையும் அதே போல் வெட்டி சேர்த்து கொள்ளவும்.பிறகு மிக்சி ஜாரில் கொஞ்சம் தேங்காய், சோம்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு அதையும் வதக்கியத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்னர் மல்லி இலை, புதினா இலை சேர்த்து தேவையானளவு தண்ணீர் சேர்க்கவும்.நன்றாக கொதிக்க வைக்கவும். இப்போது சுவையான சால்னா ரெடி