சென்னை: குழந்தைகளுக்கு சத்தான சுவையான மில்க் ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் சோயா ஃப்ரூட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இந்த சத்தான மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோயா பால் – ஒரு கப்,
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்,
நாட்டு சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
விருப்பமான ஃப்ரூட் கலவை – அரை கப் (தோல், விதை நீக்கியது).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சோயா பால் ஊற்றிச் சூடாக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிடவும். இதனுடன் பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கி ஆறவிடவும்.
பிறகு, பழத்துண்டுகளைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து எடுக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறலாம்.