பானி பூரி தெரியாதவர்களும் சாப்பிடாதவர்களும் இருக்க மாட்டார்கள் என்றால் அது மிகையாகாது. இதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் பானி பூரி பிரியர்களாக உள்ளனர். ஆனால் கடைகளில் சாப்பிடும் இந்த பானிபூரிகள் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுவது உண்டு.
ஆனால் தயாரிக்கும் விதத்தில் தரம் இல்லாததால் இப்படிச் சொல்கிறார்கள். உண்மையில் பானிபூரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அது எப்படி? பானிபூரியில் உள்ள உருளைக்கிழங்கு, புளி, வெங்காயம், கொண்டைக்கடலை மற்றும் மசாலாப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று சில சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பானிபூரி செரிமானத்திற்கு நல்லது. பானிபூரி தண்ணீரில் உள்ள சீரகம் மற்றும் சில மசாலாப் பொருட்கள் செரிமான நொதிகளைத் தூண்டுகின்றன.
இதன் மூலம் உண்ணும் உணவு விரைவில் ஜீரணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு பானிபூரி நல்லது. மிளகு, இஞ்சி, சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் பானிபூரி தண்ணீரில் உள்ளன. இவை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக ஒரு பானி பூரியில் 36 கலோரிகள் இருக்கும். 6 பூரிகளை கொண்ட ஒரு தட்டு பானிபூரி உங்களுக்கு 216 கலோரிகளைத் தரும். மழைக்காலத்தில் வரும் இருமல், சளி போன்ற சிறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க பானிபூரி தண்ணீரில் சேர்க்கப்படும் புதினா அவற்றை குணமாக்கும் என்கின்றனர்.