தேவையான பொருட்கள் :
மீன் – 1 கிலோ
கடலை மாவு – 1 கப்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
சீரக பொடி – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்கு சுத்தம் செய்து, வேண்டிய அளவில் நறுக்கி, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் கடலை மாவு, கரம் மசாலா, சீரக பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர், அதனுடன் போதுமான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, சாறு புழிந்து தேவையான அளவு இந்த மாவு கலவையில் சேர்த்து மீண்டும் நன்கு கரைத்துக்கொண்டால் மசாலா கலவை தயாராகி விடும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், தயாராக வைத்துள்ள மீனை மசலா கலவையில் முக்கி எடுத்து எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக வறுக்க பஞ்சாப் ஸ்டைல் மச்சிலி மீன் வறுவல் தயார். சுவையான இந்த மச்சிலியினை ஒரு தட்டில் வைத்து, அதன் மீது சிறிதளவு மிளகு தூள், எலுமிச்சை சாறு பிழிந்து சுட சுட பிரமாறலாம். இது சாதாரணமான மீன் வறுவலை போல அல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.