தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – ½ கப்
உளுந்து (கருப்பு) – ½ கப்
தண்ணீர் – தேவையான அளவு
ஏலக்காய் – சிறிது
சுக்கு – சிறு துண்டு
நாட்டு சர்க்கரை (அல்லது) வெல்லம் – தேவையான அளவு
செய்முறை: கேழ்வரகு, உளுந்து இரண்டையும் தனித்தனியாக வாணலியில் லேசாக வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் 6 கிளாஸ் தண்ணீர் விட்டு, மிக்ஸியில் செய்த பொடியை கலந்து சிறு தீயில் வைத்து கிளறி, ஏலக்காய், சுக்கு சேர்த்து கிளறவும். சூடானதும் வெல்லம் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆறவிடவும். கை, கால், இடுப்பு வலி மற்றும் எலும்பு வலிமைக்கு ஒரு கிளாஸ் குடிக்கலாம்.