தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 6
பெரிய வெங்காயம் – 3
வேர்க்கடலை – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பிறகு அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். பிறகு 6 அல்லது தேவையான அளவு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுக்கவும். பிறகு அதில் வதக்கிய பொருட்களை சேர்க்க வேண்டும். பிறகு 1/4 கப் நிலக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்றாக அரைக்க வேண்டாம். பின்னர் அதில் போதுமான அளவு அதாவது 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து சிறிது வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதில் அரைத்த சட்னியை சேர்க்கவும். அவ்வளவுதான் சட்னி ரெடி..