தேவையானவை
தக்காளி – 1
மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு
உப்பு – தேவைக்கேற்ப
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சை – அரை மூடி
மிளகு தூள் – சிறிதளவு
பெருங்காயம் தூள் – தேவைக்கேற்ப.
காய்ந்த மிளகாய் – 2
தண்ணீர் – 2 டம்ளர்
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து இலைகளை மட்டும் நறுக்கவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வெங்காயத்தை வதக்கவும். அடுத்து, தக்காளியை வதக்கவும். கீரையைச் சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்றாக வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, 2 டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அரைத்த கீரை கலவையைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு, தேவையான உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும். வடிகட்டிய பின் 3 துளி எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.