சென்னை: மாங்காய் தேங்காய் கூட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
பெரிய மாங்காய் – ஒன்று
தேங்காய் துருவல் – ரெண்டு கப்
நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்று
மஞ்சள் பொடி – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
பட்டை கிராம்பு – தாளிக்க
செய்முறை: மாங்காய் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கெட்டியாகவும். நீர்பதமாகவும் இரண்டு விதமாக பால் எடுக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, 2 கிராம்பு பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மாங்காய் துண்டுகளை போட்டு வதக்கி, தீர்ப்பதற்கான தேங்காய் பாலை விட்டு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும். மாங்காய் வெந்ததும், கெட்டியான தேங்காய்ப்பாலை விட்டு கொதித்ததும் இறக்கி விடவும். இந்த கூட்டை சாதத்தில் விட்டும் சாப்பிடலாம் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.