தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப்
முந்திரி – 1 கப்
அரிசி மாவு – 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
பெருங்காயம் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
புதினா இலைகள் – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
செய்முறை:
மிக்ஸியில் புதினா, கொத்தமல்லியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்க்கவும். பிறகு முந்திரி சேர்த்து கலக்கவும். அடுத்து சூடான எண்ணெயை ஊற்றி கலக்கவும். பின் அரைத்த புதினா, கொத்தமல்லி சட்னி சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறு சிறு உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான புதினா முந்திரி பக்கோடா ரெடி.