இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஸ்டீல் பாத்திரங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமைக்கும் போது தீயின் அளவு அதிகமாகி விட்டால், உணவு அடிபிடித்து பாத்திரம் கருகிவிடும். அதை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். ஆனால் வெங்காயம், வினிகர், சமையல் சோடா, வெங்காயத் தோல் போன்ற இயற்கை முறைகள் உதவிகரமாக இருக்கும்.

1. வெங்காயம் மற்றும் வினிகர்
அரை கப் வெங்காயச் சாறுடன் அரை கப் வினிகரை கலந்து எரிந்த பாத்திரத்தில் ஊற்றி 15-20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஸ்க்ரப்பரால் தேய்த்தால் அடிபிடித்த கருக்கள் எளிதில் நீங்கி பாத்திரம் பளபளக்கும்.
2. வெங்காயம் மற்றும் சமையல் சோடா
பாத்திரத்தில் சோடா தூவி, பாதி நறுக்கிய வெங்காயத்தால் தேய்க்கவும். பின்னர் வெந்நீரை ஊற்றி 15 நிமிடங்கள் வைக்கவும். கழுவியதும் பிடிவாதமான கறைகள் கூட நீங்கும்.
3. வெங்காயத் தோல்
பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் வெங்காயத் தோல் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்னர் தண்ணீரை இறக்கி ஸ்க்ரப்பரால் தேய்த்தால் கருப்பு பிடிகள் எளிதில் அகலும்.
4. இயற்கையான நன்மைகள்
வெங்காயத்தில் உள்ள இயற்கை அமில தன்மை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாத்திரங்களை சுத்தமாக்குவதோடு, அதில் இருக்கும் துர்நாற்றத்தையும் நீக்கும். எந்த வகை இரசாயனமும் பயன்படுத்தப்படாததால் கைகளுக்கும், பாத்திரங்களுக்கும் பாதிப்பு இல்லை.
அதனால், அடிபிடித்த பாத்திரங்களை சுத்தம் செய்ய விலை உயர்ந்த ரசாயனப் பொடிகள் தேவையில்லை. உங்கள் சமையலறையிலேயே இருக்கும் வெங்காயம் போதுமானது.