நெத்திலி மீனும் மொச்சை பயறும் சேர்ந்தால் சாதாரண உணவையும் சிறப்பாக்கும். சத்தான மொச்சை பயறுடன் சேர்ந்து சமைக்கும் நெத்திலி மீன் குழம்பு, சுவையில் அடுத்த வீட்டாருக்கும் மணக்கும் அளவிற்கு பிரபலமானது. ஒரு தட்டு சாதத்திற்கு கூடுதலாக சாப்பிட தூண்டும் தன்மை இந்தக் குழம்பிற்கு உண்டு.

இந்த குழம்பை செய்வதற்கான தயாரிப்பு எளிதானது. முதலில் மொச்சை பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் குக்கரில் நன்கு வேகவைக்க வேண்டும். அதன் பின், கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், உளுந்து, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை வதக்க வேண்டும். இது குழம்பின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்கும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மொச்சை பயிறையும் சேர்க்க வேண்டும். பிறகு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது புளித்தண்ணீர் ஊற்ற வேண்டும். எண்ணெய் பிரிந்ததும், நெத்திலி கருவாட்டை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
அவ்வளவுதான்! சுவைமிகு நெத்திலி மீன் – மொச்சை பயறு குழம்பு தயார். சாதம், இட்லி, தோசை எதனுடன் சேர்த்தாலும் இந்தக் குழம்பு சிறப்பாக பொருந்தும். மணமோ சுவையோ குறையாத இந்தக் குழம்பு குடும்பத்தினரின் மனசையும் பசியையும் திருப்திப்படுத்தும்.