சென்னை: குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால், இதை செய்து கொடுங்கள். அந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை என்னவென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப் (நரம்புகளை நீக்கிய பின் முழு வாழைப்பூவையும் ஒரு இதழாக எடுத்துக் கொள்ளவும்).
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 5 டீஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை
சோள மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து மாவாகக் கரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவை எடுத்து மாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.