வீட்டில் காய்கறி இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டாம். வெங்காயம் மட்டும் இருந்தாலே 10 நிமிடங்களில் ருசியான கன்னியாகுமரி ஸ்பெஷல் வெறும் குழம்பு செய்து சாப்பிடலாம். இதற்குத் “வெறும் குழம்பு” என்ற பெயர் காரணம், இதில் வெங்காயத்தைத் தவிர வேறு எந்த காய்கறியும் சேர்ப்பதில்லை.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு
- தேங்காய் துருவல் – அரை கப்
- மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 10
- பூண்டு – 2 பல்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- புளி – ஒரு எலுமிச்சை அளவு
தாளிக்க
- சின்ன வெங்காயம் – 5
- வெந்தயம் – ¼ டீஸ்பூன்
- கடுகு – ¼ டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிது
- முருங்கைக் கீரை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்வது எப்படி?
- மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய்த் தூள், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
- அதில் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, முருங்கைக் கீரை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரைத்த மசாலா கலவை சேர்த்து கொதிக்க விடவும்.
- இது மற்ற குழம்புகள் போல நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். சிறிது நுரை பொங்கும் வரை கொதித்தால் போதும்.
இவ்வளவுதான்! சுவையான வெறும் குழம்பு ரெடியாகிவிடும். இதை மீன் அவையல், முட்டை வறுவல் அல்லது சாதாரண சாதத்துடன் சாப்பிட்டாலே சுவை அட்டகாசமாக இருக்கும்.