சென்னை: வீட்டில் பண்டிகைக்கு வாங்கிய பொரி மீந்துபோய் வீணாக்குவதற்கு பதிலாக அதில் அல்வா செய்து சாப்பிடலாம். பொரியில் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசிப்பொரி – 3 கப்
வெல்லம் – 3 கப்
புட் கலர் 2 சிட்டிகை
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி- 10
திராட்சை – சிறிதளவு
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசிப்பொரியைக் கொட்டி, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசிப்பொரியை தண்ணீர் இல்லாமல் நன்றாகப் பிழிந்து எடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.
வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கரைத்து பாகு தயாரிக்க வேண்டும். அடுப்பில், அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில், அரிசிப்பொரி விழுது, வெல்லப்பாகு ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் நன்றாக கிளற வேண்டும். இடையிடையே சிறிது சிறிதாக நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அதில் சிறிதளவு புட் கலர், ஏலக்காய் பொடி சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
அரிசிப்பொரி கலவை நன்றாகத் திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது அதை அடுப்பில் இருந்து இறக்கி முந்திரி, திராட்சையை 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து அல்வாவுடன் சேர்த்துக் கிளறி பரிமாறலாம். சுவையான அல்வா தயார்.