தேவையான பொருட்கள்:
காடை முட்டை – 20
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கியது)
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லிகைப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில், காடை முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடங்கள் கொதிக்க வைத்து, குளிர்ந்த நீரில் பல முறை கழுவி, ஓட்டை உரிக்கவும், தனியாக வைக்கவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்கவும், பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பச்சை மிளகாய், மசாலா சேர்த்து கிளறவும்.
பிறகு தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும், அதில் வேகவைத்த காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி!!!