தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு – 1/2 கப்
பூண்டு – 1 பல்
இஞ்சி – சிறிய துண்டு
துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி பாசிப்பயிரை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பூண்டு, துருவிய இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக கடாயில் எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும் வறுத்த பொருட்களை அரைத்து, மிக்ஸியில் வறுத்த பருப்புடன் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும். சத்தான பாசிப்பயிறு துவையல் தயார்.