ஆயுத பூஜைக்கு வீட்டில் தயாரித்த பொரி சில நேரங்களில் காற்றின் ஈரப்பதம் காரணமாக நமத்துப்போகும். இதை சிலர் குப்பையாக்குகிறார்கள், ஆனால் அதே பொரியுடன் சுவையான ஸ்நாக்ஸ் தயாரிக்கலாம். கார கொழுக்கட்டை இதற்கான சிறந்த விருப்பமாகும்.

தேவையான பொருட்கள்: பொரி – 2 கப், ரவை – 1/2 கப், அரிசி மாவு – 1/4 கப், பேக்கிங் சோடா – சிறிது, சீரகம் – 1 tsp, உளுத்தம் பருப்பு – 1 tsp, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, துருவிய இஞ்சி – சிறிது, உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது, இட்லி பொடி – 1/2 tbsp.
செய்முறை: பொரியை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து கொள்ளவும். அதில் ரவை, அரிசி மாவு, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசையுங்கள். 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து மீண்டும் பிசையுங்கள். மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து இட்லி மாவில் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பை தாளித்து, வேகவைத்த பொரி உருண்டைகளை சேர்க்கவும். இட்லி பொடி, கொஞ்சம் மஞ்சள் தூள் மற்றும் தேவையானால் மிளகாய் தூள் தூவி பிரட்டுங்கள். இப்போது சுவையான கார கொழுக்கட்டை தயார். இதை காலை அல்லது இரவு உணவுடன் சாப்பிடலாம்.