இரவு நேர உணவில் முக்கிய பங்கு வகிக்கும் தோசையில் வழக்கத்திற்கு மாறாக மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்து சாப்பிட்டு பார்க்கலாம். இது சுவையானதும், சாப்பிடுவதில் எளிதானதும் ஆகும்.
தயாரிக்க தேவையான பொருட்கள்: இட்லி அரிசி, கடலை பருப்பு, சோமு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு மற்றும் தக்காளி. சின்ன தக்காளி என்றால் இரண்டு, பெரிய தக்காளி என்றால் ஒன்று போதும்.

முதலில், அனைத்து பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து, தோசை மாவுடன் இந்த அரைத்த கலவையை சேர்த்து நன்றாக கலந்து சிறிது அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.
தோசை பேனில் இந்த கலவையை ஊற்றிவிட்டு, ஓரத்தில் சிறிய அளவு எண்ணெய் ஊற்றி, வெந்துவிட்டதும், தக்காளி தோசை தயார்.
இந்த தோசையை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டு, இரவு உணவுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும்.