சென்னை: நல்ல சுவையான கமகமக்கும் எலுமிச்சை ஊறுகாய் உங்கள் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம் 8
உப்பு தேவைக்கு
வெந்தயம் 1/4 ஸ்பூன்
பெருங்காய பொடி 1/2 ஸ்பூன்
சிவப்பு வத்தல் மிளகாய் பொடி 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
செய்முறை: முதலில் எலுமிச்சம் பழத்தை நன்றாக கழுவி அதை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். வெட்டிய துண்டுகளில் உள்ள விதையை எடுத்து விடுங்கள். வெட்டிய எலுமிச்சை துண்டுகளில் ஒரு 5 துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வையுங்கள்.
மீதமுள்ள துண்டுகளை ஒரு பாட்டிலில் போடுங்கள். தனியாக எடுத்து வைத்த 5 துண்டுகளில் உள்ள சாறை பிழிந்து பாட்டிலில் விட்டு துண்டுகளையும் உள்ளே போடுங்கள். உப்பை போடுங்கள் . உப்பு சிறிது அதிகமாகவே போடுங்கள். பாட்டிலை மூடி நன்றாக குலுக்குங்கள். ஒரு மூன்று நாள்களுக்கு தினமும் ஒரு 3-4 முறை பாட்டிலை நன்றாக குலுக்கி வையுங்கள்.
மூன்றாவது நாள் சாயங்காலம் பாட்டிலில் உள்ள எலுமிச்சையை வெளியே எடுங்கள். இப்பொழுது எலுமிச்சை நன்கு மிருதுவாயிருக்கும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சிவப்பு மிளகாய் பொடி, வெந்தயம், பெருங்காயம் இவைகளை போட்டு நன்றாக கிளறி பின்னர் எலுமிச்சையை கொட்டி நன்கு கிளறி 1 நிமிடத்தில் அடுப்பை அணைத்து கீழே இறக்குங்கள். இப்பொழுது நல்ல சுவையான கமகமக்கும் எலுமிச்சை ஊறுகாய் ரெடி.