சென்னை: அசைவ பிரியர்களுக்கு பிடித்த மிகவும் ருசியான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி – ஒரு கிலோதக்காளி – ஒன்றுபெரிய வெங்காயம் – ஒன்றுபச்சை மிளகாய் – 4ஜீரகப்பொடி – ஒரு தேக்கரண்டிவெள்ளை மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டிகரம் மசாலாப்பொடி – ஒரு தேக்கரண்டிஇஞ்சிப்பூண்டு விழுது – ஒரு மேஜைக்கரண்டி(குவியலாக)பட்டை – 2 துண்டுகிராம்பு – 5ஏலம் – 5தயிர் – 200 மில்லிமல்லி, புதினா – ஒரு பிடிதேங்காய் – பாதி மூடிகசகசா – 2 தேக்கரண்டிமுந்திரி பருப்பு – 8எண்ணெய் – ஒரு மேஜைக்கரண்டிவெண்ணெய் (அ) நெய் – 50 கிராம்உப்பு – தேவையான அளவுஎலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
செய்முறை: முதலில் கசகசாவை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பின்பு முந்திரியை அதில் இட்டு அரைக்கவும். அதன் பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, மல்லி, பொதினா ஆகியவற்றையும் நறுக்கி வைக்கவும்.
பின்பு குக்கரில் எண்ணெய், வெண்ணெய் இரண்டையும் ஒன்றாய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றை போட்டு வெடிக்கவிடவும். அதன் பிறகு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயில் பாதியையும், நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள இறைச்சியைப் போட்டு வதக்கவும். லேசாக வதக்கிய பின்பு அனைத்து மசாலாப்பொருட்களையும் அதில் சேர்க்கவும். மசாலாவை சேர்த்து நன்கு கிளறிவிட்டு பின்னர் தயிரை ஊற்றவும்.
அனைத்தையும் ஒன்று சேர கிளறி பின்னர் அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து மூடி வெயிட் போட்டு 20 நிமிடங்கள் வேகவிடவும். 20 நிமிடங்களுக்கு பின்பு திறந்து, அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். இனி தீயை குறைத்து வைத்து வேகவிடவும். மேலும் மீதமுள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கவும். குருமா திரண்டு வரும் தறுவாயில் எலுமிச்சை சாற்றை ஊற்றவும். மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு பின்னர் இறக்கவும். இப்போது சூடான, சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.