உணவை சமைக்கும் முறையே அதன் சத்துக்களையும், சுவையையும் தீர்மானிக்கிறது. சில காய்கறிகளை நறுக்கியவுடன் உடனே சமைத்தால் அவை சத்துக்களை இழந்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்க வேண்டிய உணவுகள், தவறான முறையில் சமைக்கப்படும்போது விஷம் போல மாறலாம்.

வெண்டைக்காய் போன்ற காய்கறிகளில் பிசுபிசுப்புத் தன்மை அதிகம். அதை நறுக்கிய உடனே சமைத்தால் உணவின் அமைப்பையே கெடுக்கும். வெண்டைக்காயை நன்கு உலர வைத்து, எண்ணெய் இல்லாமல் வதக்கிய பிறகு தான் சமைக்க வேண்டும்.
காலிஃபிளவரும், முட்டைக்கோசும் பூச்சிகள் அதிகம் காணப்படும் காய்கள். இதனை நறுக்கிய பிறகு வெந்நீரில் கொதிக்க வைத்து புழுக்கள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். முட்டைக்கோசை வெட்டி உப்பு மற்றும் வினிகர் தண்ணீரில் சிறிது நேரம் வைத்தாலே பாதுகாப்பாக இருக்கும்.
கத்திரிக்காயில் புழுக்கள் இருப்பது சாதாரணமே. நறுக்கியவுடன் அது கரும்படத் தொடங்கும். ஆக்ஸிஜனேற்றம் காரணமாக சுவை, சத்துக்கள் குறையும். இதற்காக வெட்டிய பிறகு உப்பு நீரில் சில நிமிடம் வைத்தால், சமைக்க ஏற்ற சீரான காயாக மாறும்.
வீட்டிலேயே சமைக்கும் உணவு என நினைத்து நாம் கவனிக்காமல் செய்வதைத் தவிர்த்து, ஒவ்வொரு காய்கறிக்கும் ஏற்ற முறையில் சமைக்க வேண்டும். இது தான் உண்மையான ஆரோக்கிய உணவின் அடிப்படை.