தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளி – ½ கிலோ
சர்க்கரை – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
அல்வா தூள் – ¼ தேக்கரண்டி
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில், தக்காளியை பொடியாக நறுக்கி, அதில் 1 கப் சர்க்கரை மற்றும் அல்வா தூள் சேர்த்து நன்கு கிளறவும். தக்காளி வெந்ததும் புளிப்பு பதம் வந்ததும் ஏலக்காய் தூள் தூவி நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். இது ரொட்டிக்கு சிறந்த சைட் டிஷ் ஆகும்.