கொழும்பு: மின் கட்டணம் குறைப்பு… இன்று (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணம் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து உரிய தரவுகளை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.