May 10, 2024

5வது முறையாக சாம்பியன் பட்டம்… சிஎஸ்கேவின் வெற்றி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ

ஐபிஎல்: குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் சென்னை அணியின் வெற்றி கொண்டாட்டம் தொடர்பாக ஐபிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. அதன்பின், 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியபோது, 3 பந்துகள் மட்டுமே வீசிய போது மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி, நள்ளிரவு 12.10 மணிக்கு ஆட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு, ஓவர்கள் 15 ஆக மாற்றப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களும், டெவோன் கான்வே 47 ரன்களும் எடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அடுத்து வந்த அஜிங்க்யா ரஹானே அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அணிக்கு ரன் குவிக்க உதவினார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. மோகித் சர்மா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 2வது, 3வது மற்றும் 4வது பந்துகளில் தலா 1 ரன் எடுக்க ஜடேஜா 5வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, ஜடேஜா அதை பவுண்டரியாக மாற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!