May 17, 2024

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி… 4-வது முறையாக மகுடம் சூடிய இந்திய அணி

ஓமன்: ஆடவர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 2 கோல்களும், பாகிஸ்தான் 1 கோல்களும் அடித்தன. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் அங்கத் பிர் சிங்கும், 20வது நிமிடத்தில் அரிஜீத் சிங் ஹண்டாலும் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு பலம் சேர்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம், இந்தியாவின் ஜூனியர் ஹாக்கி கோப்பைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 2004, 2008 மற்றும் 2015ல் ஜூனியர் ஆசிய கோப்பையை இந்தியா வென்றிருந்தது. ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு ஹாக்கி இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!