June 25, 2024

ரூ.100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 41,952 சதுர அடி நிலம் மாவட்ட நிர்வாகத்தால் இன்று மீட்கப்பட்டது. இந்த நிலம் காலாவதியான பட்டா நிலமாக வருவாய் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தற்காலிகமாக கோவில் பயன்பாட்டிற்கு பயன்படுத்த காசிவிஸ்வநாத தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. பின்னர் இந்த இடத்தை காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு பயன்படுத்தாமல், வன்னியர் சங்க கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டி அரசுக்கு வாடகை செலுத்தாமல் வேறு நபர்கள் ஆக்கிரமித்தனர்.

எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்றிட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6-ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன.

ஆக்கிரம்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில், வருவாய் நிலையாணை எண்.29-ன் பிரிவு 13-ன் படி, மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் இன்று அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!