தமிழகத்தில் நாளை ஜூலை 3ஆம் தேதி, அவசர பராமரிப்பு மற்றும் பழுது திருத்த பணிகளுக்காக 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின் தடை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தடை காரணமாக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கோவை மற்றும் கோவை வடக்கு பகுதிகளில் ஏரோ நகர், மதியழகன் நகர், செங்கதுரை, சரவணம்பட்டி, மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், சிவானந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது.
சென்னையில் கன்னிகாபுரம், ராஜமன்னார் சாலை, சாஸ்திரா கல்லூரி, ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் வேளச்சேரி மெயின் ரோடு, அதிபதி தோட்டம், கைலாஷ் நகர் உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் 13 கிராமங்களுக்கு மின் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை நகரில் அரசு பாலிடெக்னிக், சுப்ரமணியபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம், பூமார்க்கெட் போன்ற பகுதிகள் பாதிக்கப்படும்.
புதுக்கோட்டையில் ஆவுடையார்கோயில், நாகுடி, அமரடக்கி பகுதிகள் முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.
தஞ்சாவூரில் அருளானந்தா நகர், ஒரத்தநாடு பகுதிகள் மின்தடைக்கு உள்ளாகின்றன.
இந்த மின் தடையின் நேரம் மற்றும் பரிமாணங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பொதுமக்கள் தங்களின் தேவைப்படும் பயன்பாடுகளை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.