புதுடில்லி: இந்திய கால்பந்து ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக கலித் ஜமில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான கலித் ஜமில், ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளரான நியமிக்கப்பட்டுள்ளார். ஐ-லீக் 2017 சீசனில் ஐஸ்வால் கால்பந்து கிளப் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி (பயிற்சியாளராக) சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
48 வயதாகும் கலித் ஜமில், தற்போது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக உள்ளார். அனைத்து இந்திய கால்பந்து பெடரேசனின் நிர்வாகக் குழு கலித் ஜமிலை தேர்வு செய்துள்ளது. இறுதிப் பட்டியலில் மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ஸ்டீப்ன் கான்ஸ்டைன் மற்றும் ஸ்லோவாகியா தேசிய அணியின் ஸ்டீபன் தர்கோவிக் ஆகியோர் ஆவார்கள்.
கலித் ஜமித் ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இந்தியா ஆகஸ்ட் 29ஆவது தேதியில் இருந்து மத்திய ஆசிய கா்பந்து அசோசியேசன் தேசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடக்கிறது.
ப