பெங்களூரு: பெங்களூரில் நடந்த மினி ஒலிம்பிக்கில் 8-ம் வகுப்பு மாணவர் அஜய் பிருத்விராஜ் இரண்டு பரிசுகளை வென்றார். கர்நாடக விளையாட்டுத் துறை மற்றும் மாநில ஒலிம்பிக் சங்கம் இணைந்து மினி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தின.
இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மைசூருவில் உள்ள காயத்ரிபுரத்தில் வசிக்கும் லிங்கராஜ் மற்றும் சங்கீதா தம்பதியின் மகன் அஜய் பிருத்விராஜ், 14. இவர் ஐடியல் ஜாவா ரோட்டரி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
மினி ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் மற்றும் 600 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு இரண்டிலும் முதல் பரிசு பெற்றார். ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த அஜய் பிருத்விராஜ், சர்வதேச வீராங்கனை ரீனா ஜார்ஜிடம் பயிற்சி பெற்று வருகிறார்.