சாய்னா நேவால் இந்தியாவின் ஹரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்தார். ஆனால் தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் இதுவரை 451 வெற்றிகளையும், 223 தோல்விகளையும் குவித்துள்ளார். இதுவரை 5 முறை தங்கம் வென்றுள்ளார். 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒற்றையர் தங்கம் வென்றார். அதே ஆண்டில் கலப்பு பிரிவில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார்.
2008 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற சாய்னா, 2006 போட்டியில் வெள்ளி வென்றார். காலில் ஏற்பட்ட காயம் அவரை சில ஆண்டுகள் போட்டியில் இருந்து விலக்கி வைத்தது. இந்நிலையில்தான் சாய்னா நேவால் கிரிக்கெட் குறித்து பேசிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், கிரிக்கெட், உடல் ரீதியான விளையாட்டாக இல்லாவிட்டாலும், இந்தியாவில் கணிசமான அளவு கவனத்தைப் பெறுவது குறித்து அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போன்றவற்றை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், கிரிக்கெட் என்பது உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டு அல்ல என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரர் ஆங்ரிஷ் ரகுவன்ஷி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கினால்தான் தெரியும் என்றார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து கோபம் ரகுவன்ஷி கூறியதாவது: அனைவரும் என்னை மன்னியுங்கள். நான் நகைச்சுவையாக என் கருத்துக்களைச் சொன்னேன். ஆனால் பின்னோக்கிப் பார்த்தால் இது மிகவும் முதிர்ச்சியற்ற நகைச்சுவை என்று நினைக்கிறேன். தனது தவறை உணர்ந்து மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.