மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
செப்., 30-ல் தொடங்கும் மகளிர் உலக கோப்பைக்கான இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வர மறுத்ததால் பாக்., போட்டிகள் கொழும்புவில் நடத்தப்படுகின்றன.
பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் கொழும்புவில் பிற போட்டிகள் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் செமி பைனலுக்கு முன்னேறினால் 1 செமி பைனல் கொழும்புவிலும் இல்லாவிட்டால் கவுகாத்தியிலும்; பைனல் பெங்களூர் (அ) கொழும்புவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.