மும்பை: ஐபிஎல் தொடரில் RCB-யே கோப்பையை வெல்லும் முன்னாள் கிரிக்கெட் வீரர் பதான் கணித்துள்ளார்.
RCB-யின் ‘ஈ சாலா கப் நமதே’ கனவு நடப்பு IPL தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கணித்துள்ளார். RCBக்கு நல்ல பவுலிங் யூனிட் உள்ளதாகவும், அவர்கள் கண்டிப்பாக டாப்-4க்குள் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் போட்டியிலேயே கிடைத்த வரவேற்பை அவர்கள் தக்க வைப்பார்கள் என தான் நம்புவதாகவும், கேப்டன் படிதார் ரிஸ்க் எடுப்பது தனக்கு பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.